logo
  • facebook
  • twitter

ACTIVITY

வகுப்பறை: 


வாசிப்பு திறன்:


மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சியில் மிகுந்த கவனம் எடுத்து சிறப்பு பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. மாணவர்களின் வாசிப்பு திறனிற்கு ஏற்ப மாணவர்களை பிரித்து தனித்தனி வகுப்புகளாக சிறப்பு ஆசிரியர்கள் நியமித்து வாசிப்பு பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கபடுகிறது.

 


எழுத்துப் பயிற்சி:


மாணவர்களுக்கு அரசாங்கம் தரக்கூடிய எழுத்துப் பயிற்சி கையேடு மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டு சிறப்பாக எழுதுவதற்கும் உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்.

 

 


ஆளுமைத்திறன்:


மாணவர்களின் தலைமைப் பண்பை ஊக்குவிக்கும் வண்ணம் வகுப்புவாரியாக மாணவ தலைவர்களையும் பள்ளியில் சட்டகுழு மற்றும் ஆரோக்கிய குழு அமைத்து பிள்ளைகளின் ஒழுங்குமுறைகளையும், பள்ளியின் சுத்தம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை கவனிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்போதிருந்தே ஆளுமை பண்பை வெளிகொணர வாய்ப்பளிக்கபடுகிறது.


ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி:


மாணவர்கள் ஆங்கில பேச்சுத்திறனை மேம்படுத்தும் விதம் வகுப்பறையில் அனைவரும் ஆங்கிலத்தில் பேச வலியுறுத்தப்படுகிறார்கள். ஆங்கில வழிக்கல்வி மாணவர்களுக்கு அனைத்து பாடங்களும் ஆங்கிலத்தில் நடத்தப்படுகிறது. மேலும் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு ஆங்கில பேச்சுத்திறன் வளர்க்கப்படுகிறது.

 


செயல் ஆராய்ச்சி:


பாட சம்பந்தமாக ஆராய்ச்சி கட்டுரைகள் செய்ய உற்சாகபடுத்தப்படுகிறார்கள். அனைத்து வகுப்புகளிலும் FA (a) activity மூலம் ஆராய்ச்சி செயல்பாடுகள் செய்வதற்கு ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். மாணவர்களின் சிறந்த படைப்புகள் பள்ளியின் வகுப்பறையில் மாட்டப்பட்டு மற்றவர்களும் அதே போல் செய்ய தூண்டப்படுகிறார்கள்.

 


பட்டிமன்றம்:


                  சிறந்த பேச்சாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தமிழ் ஆசிரியர்கள் மூலம் பயிற்சி வழங்கி பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சிறப்பு பயிற்சிகள் வழங்குகிறார்கள். இம்மாணவர்கள் பிறமாவட்டங்களிலும், மற்ற கலைநிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பரிசுகள் பல பெற்று வந்துள்ளனர்.

 

 

கணினி பயிற்சி:


                  SMART CLASS வசதியின் மூலம் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இதன் மூலம் பாடங்களை எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது.

 


CLUB ACTIVITY:


                  வாரம் ஒரு நாள் தையல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு பல்வேறு வகையான கைவினைப் பொருட்கள் செய்வதற்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகிறது. ஓவியப் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு ஓவியத் திறனும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

 

 

 

 


HOUSE ACTIVITY:


                        பள்ளியில் நான்கு  HOUSE பிரிக்கப்பட்டு உள்ளது. மஞ்சள், பச்சை, நீலம், பட்டுரோஸ் என நான்கு வகுப்புகள் பிரிக்கப்பட்டு அதற்கு CAPTAIN மற்றும் VICE CAPTAIN நியமிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிற்கு நான்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அம்மாணவர்களின் கல்வி, கலை, இலக்கியம், ஒழுக்கம் ஆகிவற்றில் மேம்பட உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்.

 

 

 

 

 

Contact

Cell: 8825287711

Phone : 04565  227717

Email : rmsmhskkdi@gmail.com

Gallery

image image image