logo
  • twitter

Our Facilities

ஆய்வகம்


பள்ளியில் சிறந்த ஆய்வக வசதி உள்ளது. இக்கால மாணவர்கள் பிற்கால விஞ்ஞானிகளாக வர வேண்டும் என்ற நோக்கில் ஆய்வகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அறிவியலில் உள்ள அனைத்து பிரிவிற்கும் தேவையான அளவு ஆய்வக பொருட்கள் வாங்கி வைக்கபட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆய்வகத்தில் மட்டுமே செயல் விளக்கம் அளிக்க முடியும் என்பது இல்லாமல் பாடம் நடத்துவதற்கு தேவையான அறிவியல் துணைக்கருவிகள் வகுப்பறைகளுக்கும் எடுத்து வரப்பட்டு அவற்றின் செயல்முறை விளக்கம் மாணவன் நன்கு உணரும்படியும் கற்பிக்கப்படுகிறது.

 

 


நூலகம்

மாணவர்கள் கற்கும் திறனை மேம்படுத்துவதற்காக பள்ளியில் நூலக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடமும் தொடர்புடைய புத்தகங்கள், கட்டுரை, கதை, கவிதை புத்தகங்கள், பொதுஅறிவு, DICTIONARY, அறிவியல் அறிவை வளர்க்கும் புத்தகங்கள் என பல்வேறு புத்தகங்கள் வாங்கப்பட்டு ஒவ்வொரு வகுப்பிற்கும் வாரம் ஒருமுறை நூலக பாடவேளை பிரிவு ஒதுக்கப்பட்டு மாணவர்களின் அறிவு வளர வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் நூலகத்திற்கு சென்று செய்தி தாள், மற்றும் இதழ்கள் படிப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

SMART CLASS


                  SMART CLASS என்பது பெரிய தனியார் பள்ளிகளில் மட்டுமே இருக்கக்கூடிய ஒன்று என்ற கருத்தை முறியடித்து அரசு பள்ளியான இப்பள்ளியிலும் SMART CLASS, INTERNET வசதி ஆகியவை உள்ளது. SMART CLASS மூலம் மாணவர்களுக்கு பாடங்களை VISUAL ஆக காட்டும் போது பாடத்தின் கருத்து முழுவதுமாக விளங்குகிறது. இதனால் மாணவர்கள் தேவையில்லாமல் மனப்பாடம் செய்ய வேண்டிய நிலை இல்லாததால் மாணவர்களின் கற்றலுக்கான மன அழுத்தம் குறைகிறது. இதனால் மாணவர்கள் சந்தோஷமாக பாடங்கள் கற்கின்றனர். மேலும் வகுப்பறையில் பாடங்கள் ONLINE மூலமாகவும் நடத்தப்படுகிறது. இதனால் மாணவர்கள் புத்தகத்தில் உள்ளதை மட்டும் தான் படிக்க வேண்டும் என்ற நிலை இல்லாமல் புத்தகத்தை தாண்டியும் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்கின்றனர். இதனால் மாணவர்களின் பொதுஅறிவு மேம்படுகிறது. பள்ளியில் SMART CLASSக்காக பல்வேறு குறுந்தகடுகள் வாங்கப்பட்டு அவை வகுப்பறைகளுக்கு பாடங்களாக எடுத்து செல்லப்படுகிறது.   

 


பாதுகாக்கபட்ட குடிநீர்


                  சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதற்கு ஏற்ப பள்ளி மாணவர்களின் உடல் நலத்தில் மிகுந்த அக்கறை உடையது இப்பள்ளி. எனவே தான் மாணவர்கள் அருந்தும் குடிநீர் மூலம் எவ்வித நோய் கிருமி தொற்றுதலும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக மாணவர்கள் குடிக்கும் நீர் சுத்திகரிக்கபட்ட நீராக இருக்க வேண்டும் என்பதற்காக RO SYSTEMபொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சுடுதண்ணீர், குளிர்ந்த தண்ணீர், மற்றும் சாதாரண தண்ணீர் ஆகியவை மாணவர்களுக்கு சிறந்த முறையில் வழங்கப்பட்டு அவர்களின் உடல் நலம் பாதுகாக்கப்படுகிறது.

 

அரசு நலத்திட்டங்கள் :

    • விலையில்லா புத்தகம்
    • விலையில்லா நான்கு செட்டு சீருடைகள்
    • விலையில்லா நோட்டுகள்
    • விலையில்லா புத்தகப்பை
    • நில வரைபடம்
    • விலையில்லா காலணி
    • வடிவியல் பெட்டி
    • பேருந்து பயண அட்டை
    • விலையில்லா கண்ணாடி
    • அரசு கல்வி உதவி தொகை
    • சிறுபான்மையினர் கல்வி உதவி தொகை
    • ஆதிதிராவிடர் பெண் குழந்தைகள் கல்வி உதவிதொகை
    • துப்புரவு தொழிலாளர் குழந்தைகள் நல உதவி தொகை
    • பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை

     

Contact

Cell: 8825287711

Phone : 04565  227717

Email : rmsmhskkdi@gmail.com

Gallery

image image image